< Back
மாநில செய்திகள்
செஞ்சி அருகேமணல் கடத்த முயற்சி; 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்
விழுப்புரம்
மாநில செய்திகள்

செஞ்சி அருகேமணல் கடத்த முயற்சி; 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்

தினத்தந்தி
|
20 Feb 2023 12:15 AM IST

செஞ்சி அருகே மணல் கடத்த முயன்ற சம்பவத்தில் 3 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.


செஞ்சி,

செஞ்சியை அடுத்த சத்தியமங்கலத்தில் மணல் கடத்தல் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது 3 டிப்பர் லாரிகளில் மர்மநபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். உடனே மர்ம நபர்கள் லாரிகளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து 3 லாரிகளையும் பறிமுதல் செய்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்