< Back
மாநில செய்திகள்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

தினத்தந்தி
|
10 Jan 2023 1:19 AM IST

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவையாறு அருகே ராஜேந்திரம் மெயின்ரோடு பகுதியில் நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 3 மாட்டு வண்டிகளில் வெட்டாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்