< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது
|25 Aug 2022 10:47 PM IST
மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கே.வி.குப்பத்தை அடுத்த, கவசம்பட்டு பாலாற்றங்கரையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 38) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் வழக்குப்பதிவு செய்து, பொன்னுசாமியை கைது செய்தார். மணலுடன் மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.