< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
மணல் கடத்தியவர் கைது - டிராக்டர் பறிமுதல்
|22 July 2022 1:27 PM IST
பள்ளிப்பட்டு அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
பள்ளிப்பட்டு பகுதியில் திருத்தணி ஆர்.டி.ஓ. அஷ்ரத் பேகம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிப்பட்டு அருகே குமாரராஜுப்பேட்டை கணவாய் மேடு பகுதியில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற டிராக்டரை அவர் மடக்கி பிடித்து விசாரித்தார்.இந்த விசாரணையில் எவ்வித ஆவணமும் இல்லாமல் கொளத்தூர் குவாரியில் இருந்து கிராவல் மண் எடுத்துக் கொண்டு அத்திமாஞ்சேரி பேட்டை நோக்கி செல்வதாக டிராக்டர் ஓட்டி வந்தவர் தெரிவித்தார். அவர் அத்திமாஞ்சேரிபேட்டை காலனி, கோவில் தெருவை சேர்ந்த வேலு (வயது 42) என்பது விசாரணையில் தெரிந்தது. இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த வேலுவையும் பள்ளிப்பட்டு போலீசில் ஆர்.டி.ஓ. ஒப்படைத்தார்.