< Back
மாநில செய்திகள்
மணல் கடத்தியவர் கைது; மாட்டு வண்டி பறிமுதல்
அரியலூர்
மாநில செய்திகள்

மணல் கடத்தியவர் கைது; மாட்டு வண்டி பறிமுதல்

தினத்தந்தி
|
11 July 2023 12:12 AM IST

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டு, மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கோவிந்தபுத்தூர் கிராம நிர்வாக அலுவலராக (பொறுப்பு) பணிபுரிபவர் அறிவழகன்(வயது 34). இவர் சம்பவத்தன்று கோவிந்தபுத்தூர் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது எதிரில் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை மறித்து, அதில் இருந்தவரிடம் விசாரித்தார். அப்போது கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து மணல் கடத்தியது தெரியவந்தது. இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் அறிவழகன், விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டியை ஓட்டி வந்த குமணந்துறை பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்