< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
மணல் கடத்தியவர் கைது
|22 Sept 2022 7:36 PM IST
அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்ததனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள கவரைப்பேட்டை-சத்யவேடு சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து அந்த வழியாக சென்னையின் புறநகர் பகுதிக்கு அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரியை அவர்கள் மடக்கி பிடித்ததனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடேசன் (வயது 42) என்பவரை கைது செய்தனர். மேலும் 10 யூனிட் மணலுடன் லாரியையும் போலீசார் கைப்பற்றினர்.