< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மணல் கடத்தியவர் கைது
|1 Sept 2022 1:03 AM IST
மணல் கடத்தியவர் கைது- டிப்பர் லாரி பறிமுதல்
பேட்டை:
பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எம்.சாண்ட் மணலை ஏற்றி கொண்டு சென்ற ஒரு டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், முறையான அனுமதியின்றி மணல் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து நெல்லை மண்டல துணை தாசில்தார் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணலை கடத்திய சீதபற்பநல்லூர் முப்பிடாதியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 37) என்பவரை கைது செய்தனர். டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.