< Back
மாநில செய்திகள்

சிவகங்கை
மாநில செய்திகள்
மணல் கடத்தியவர் கைது

5 July 2023 12:15 AM IST
மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த செல்லப்பனேந்தல் பகுதியில், வைகை ஆற்றில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வைகை ஆற்றிலிருந்து அனுமதி இல்லாமல் மோட்டார்சைக்கிளில் 6 சாக்குகளில் மணல் அள்ளி கடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த முத்துராஜா(வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.