மணல் கொள்ளை விவகாரம்; தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - வானதி சீனிவாசன்
|மணல் கொள்ளை விவகாரம் குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"மணல் கொள்ளை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அமலாக்கத்துறை எடுக்கின்ற நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ஜ.க. சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இன்று நீர்வளத்துறை சார்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு அழகான குவளையை கொடுத்திருக்கிறார்கள். வருங்காலத்தில் இது போன்ற ஒரு கோப்பையில் மணலை நிரப்பி, இதுதான் மணல் என்று காட்ட வேண்டிய நிலை வந்துவிடாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்."
இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.