< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்: கார்த்திகேயபுரம் காப்புக்காட்டில் மணல் கொள்ளை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர்: கார்த்திகேயபுரம் காப்புக்காட்டில் மணல் கொள்ளை

தினத்தந்தி
|
26 Nov 2022 3:19 PM IST

கார்த்திகேயபுரம் ஊராட்சியத்தில் உள்ள காப்பு காட்டில் கிராவல் மண் கொள்ளையை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பத்மாபுரம் கிராமம் அருகே அடர்ந்த காப்புக்காடு உள்ளது.

இந்த வனப்பகுதியில் இருந்து கிராவல் மண்ணை பல நாட்களாக லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் கிராவல் மண்ணை கடத்தும் லாரிகள் திருத்தணி வழியாக வந்தால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதற்காக கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சாலை வழியாக வந்து கார்த்திகேயபுரம் காப்பு காட்டுக்குள் நுழைந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்குள் சென்று விடுகின்றனர். இதற்காக பெரியகடம்பூர், கார்த்திகேயபுரம் வனப்பகுதிக்கு இடையே லாரி செல்லும் அளவிற்கு மண் சாலை உருவாக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி வனப்பகுதியில் மண் எடுக்கப்படுவதாலும் மனிதர்களுக்கும், வனவிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

வனப்பகுதியில் மண் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்