விழுப்புரம்
மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
|மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலத்தில் செயல்படும் மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்யகோரியும், உடைந்த எல்லீஸ்சத்திரம் தடுப்பணையை விரைந்து கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி நாராயணன், மாவட்ட நிர்வாகி ராமமூர்த்தி, நகர செயலாளர் முருகன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சவுரிராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில துணை பொதுச் செயலாளர் பெரியசாமி கண்டனம் தெரிவித்து பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த குமார், சேகர், ராதாகிருஷ்ணன், மணிகண்டன், ராஜிக்கண்ணு, வெங்கடேசன், நாராயணன், ஏழுமலை, சாவித்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.