< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
|29 April 2023 12:30 AM IST
பர்கூர்:
பர்கூர் தாலுகா கொண்டப்ப நாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரராஜூ மற்றும் அதிகாரிகள் பர்கூர் அருகே வி.நாகமங்கலம் புருஷோத்தமன் ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 3 லாரிகள் நின்றன. அதை சோதனை செய்த போது அதில் தலா 2 யூனிட் மணல் வீதம் மொத்தம் 6 யூனிட் கடத்த இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரராஜூ கொடுத்த புகாரின்பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 லாரிகளைபறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.