< Back
மாநில செய்திகள்
சமத்துவம், சமூக நீதிக்கு எதிரான சனாதன தர்மத்தை வேறோடு அகற்ற வேண்டும் - துரை வைகோ
மாநில செய்திகள்

சமத்துவம், சமூக நீதிக்கு எதிரான சனாதன தர்மத்தை வேறோடு அகற்ற வேண்டும் - துரை வைகோ

தினத்தந்தி
|
15 Sept 2023 8:22 PM IST

சமத்துவம், சமூக நீதிக்கு எதிரான சனாதன தர்மத்தை வேறோடு அகற்ற வேண்டும் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை மதிமுக மாநாட்டில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியதாவது:-

30 ஆண்டுகளாக அண்ணாவின் பிறந்தநாளை மாநாடாக கொண்டாடும் ஒரே இயக்கம் மதிமுக. நீ உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற ஏற்றத் தாழ்வை உருவாக்கியது சனாதனம். சுய மரியாதையை குழிதோண்டி புதைத்தது. சனாதனத்தால் திறமை, விருப்பத்தால் கல்வி, வேலையை தீர்மானிக்க முடியாது. சாதிதான் இதை தீர்மானிக்கும்.

குழந்தை திருமணத்தை வலியுறுத்துகிறது சனாதனம். பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை தகர்க்கத்தான் 100 ஆண்டுகளாக திராவிட அரசியல் செயலாற்றுகிறது. முகலாயர்கள், பிரிட்டிஷ்காரர்களால் அழிக்க முடியாததை திராவிட அரசியல் செய்து காட்டியது. சமத்துவம், சமூக நீதிக்கு எதிரான சனாதன தர்மத்தை வேறோடு அகற்ற வேண்டும்.

சனாதனத்தை அண்ணா - அம்பேத்கர் எதிர்த்தனர். சனாதன தர்மத்தின் முதுகெலும்பை 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பெரியார் போன்றவர்களால் முறித்துவிட்டனர். சனாதனத்தை ஆதரிக்கும் இயக்கம் இருக்கும்வரை சாதிய கொடுமை இருக்கத்தான் போகிறது. மனிதநேயத்துக்கு எதிரான சனாதன தர்மத்தை முழுமையாக அகற்றுவது அனைவரின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்