< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
கோவில் பூட்டை உடைத்து சாமி சிலை திருட்டு
|25 Jan 2023 12:03 AM IST
கோவில் பூட்டை உடைத்து சாமி சிலை திருட்டுபோனது.
செந்துறை:
சாமி சிலை திருட்டு
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ஆனந்தவாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக காலனி தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் உள்ளார்.
இந்நிலையில் இவர் வழக்கம்போல் காலையில் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றபோது, கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது கருவறையில் இருந்த 2½ அடி உயரமுள்ள வெண்கலத்தாலான கருப்புசாமி சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் சாமி சிலை திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.