< Back
மாநில செய்திகள்
வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் முழுமையாக மீட்கப்படவில்லை
விருதுநகர்
மாநில செய்திகள்

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் முழுமையாக மீட்கப்படவில்லை

தினத்தந்தி
|
26 Jun 2023 1:54 AM IST

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் முழுமையாக மீட்கப்படவில்லை என பொன் மாணிக்க வேல் கூறினார்.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள கோவில்களில் 3½ லட்சம் சிலைகள் சட்டப்படி இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் முழுமையாக மீட்கப்படவில்லை. 10-ல் 1 சதவீதம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கோவில்கள் பராமரிப்பு செய்யாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவற்றை காப்பாற்றுவதற்காக சிவனடியார்களை ஒரே கொடையின் கீழ் கொண்டு வருவதற்காக முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்