< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆடி கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம்...!
|9 Aug 2023 6:51 AM IST
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
திருத்தணி,
ஆடி கிருத்திகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வசதிக்காக அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.