< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அம்மா உணவகத்தில் வாங்கிய சாம்பார் சாதத்தில் 'விஷ அரணை' - தூத்துக்குடியில் பரபரப்பு
|16 Sept 2023 10:29 PM IST
தூத்துக்குடியில் அம்மா உணவகத்தில் வாங்கிய சாம்பார் சாதத்தில், அரணை என்ற விஷ ஜந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் அம்மா உணவகத்தில் வாங்கிய சாம்பார் சாதத்தில், அரணை என்ற விஷ ஜந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த சரவணன் என்பவர், அருகேயுள்ள அம்மா உணவகத்தில் சாம்பார் சாதத்தை பார்சல் வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று அதை சாப்பிட்டபோது, அதில் அரணை என்ற விஷ ஜந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் அவர், அந்த சாம்பார் சாதத்துடன் நியாயம் கேட்க சென்ற நிலையில், அம்மா உணவகம் மூடப்பட்டு இருந்துள்ளது. இதனால் அவர் மீண்டும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.