< Back
மாநில செய்திகள்
சாம்பார் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு
வேலூர்
மாநில செய்திகள்

சாம்பார் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

தினத்தந்தி
|
20 Oct 2022 12:51 AM IST

மழையால் வரத்து பாதிப்படைந்த நிலையில் சாம்பார் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மழையால் வரத்து பாதிப்படைந்த நிலையில் சாம்பார் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெங்காயம்

வெங்காயம் இல்லாமல் சமையலா? என்று சொல்லும் அளவுக்கு சமையலில் ஆதிக்கம் செலுத்தும் சாம்பார் வெங்காயத்தின் விலை ஏறுமுகம் காணப்படுகிறது. வெங்காயத்தின் தோலை உரித்தால்தான் கண்ணீர் வரும். ஆனால் தற்போது விலையை கேட்டாலே கண்ணீர் வந்துவிடும் என்பது போல் விலை உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட் சங்க பொருளாளர் வடிவேல் கூறியதாவது:-

வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு திருச்சி, நாசிக் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சாம்பார் வெங்காயம் மற்றும் பல்லாரி வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் வழக்கமான நாட்களை காட்டிலும் வெங்காயத்தின் வரத்து 25 சதவீதம் முதல் 40 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் ரூ.40 முதல் ரூ.50 வரை சாம்பார் வெங்காயம் விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை ஆகிறது. அதேபோல பெல்லாரி வெங்காயம் ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

இந்த விலையில் இருந்து கூடுதலாக ரூ.5 முதல் ரூ.10 வரை சில்லறை விற்பனையில் சாம்பார் வெங்காயம், பல்லாரி வெங்காயம் விற்கப்படுகிறது. அதன்படி சாம்பார் வெங்காயம் ரூ.100-க்கு விற்கப்படுகிறது. தொடர் மழை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி இனிவரும் நாட்களில் வெங்காயத்தின் விலை உயரக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெங்காயத்தின் விலை போல மற்ற காய்கறியின் விலையும் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்