திருச்சி
சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் இடமாற்றம்
|சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 25-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த விடுதிகளில் தங்கி அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூரிலிருந்து சமயபுரம் கோவிலுக்கு வந்த ஒரு தம்பதியினர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தனர். அப்போது, விடுதிக்கு சோதனைக்கு சென்ற ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீஸ்காரர்கள் அங்கு தங்கி இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அதை தட்டி கேட்ட கணவரை போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது இந்த சம்பவம் போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் நடந்த சம்பவங்கள் உண்மை என்று தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ், போலீஸ்காரர் குமரேசன் ஆகிய இருவரையும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், திருமேனி என்ற போலீஸ்காரரை பெரம்பலூர் மாவட்டத்திற்கும், செயலரசு என்ற போலீஸ்காரரை அரியலூர் மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. சரவணசுந்தர் அதிரடியாக உத்தரவிட்டார்.இந்த நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.