< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவில் வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் - காண குவிந்த பக்தர்கள்...!
|2 July 2022 8:47 PM IST
சமயபுரம் மாரியம்மன் கோவில் வேப்பமரத்தில் பால் வடியும் அதிசய நிகழ்வை காண பக்தர்கள் குவிந்தனர்.
சமயபுரம்,
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வணங்குவதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் கோவில் வளாகத்தின் தகவல் மையம் பின்பக்கம் உள்ள வேப்பமரத்தின் கிளையில் இருந்து இன்று மாலை திடீரென பால் வடிந்ததாக கூறப்படுகின்றது. இதனை அறிந்த சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏராளமானோர் அங்கு வந்து பார்த்தனர்.
அப்போது, மரத்தில் இருந்து வடிந்த பாலை கையில் எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டனர். இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர்.