< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.71 லட்சம்
|20 Oct 2023 1:38 AM IST
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.71 லட்சம் கிடைத்தது.
சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பில் மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் இரண்டாவது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரூ.71 லட்சத்து 5 ஆயிரத்து 563 மற்றும் 1 கிலோ 278 கிராம் தங்கமும், 1 கிலோ 840 கிராம் வெள்ளியும், 85 வெளிநாட்டு பணம் மற்றும் 508 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.