கன்னியாகுமரி
நித்திரவிளை அருகே சமத்துவபுரம் வீடுகள், பள்ளியில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு
|நித்திரவிளை அருகே சமத்துவபுரம் வீடுகள், பள்ளியில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.
கொல்லங்கோடு,
நித்திரவிளை அருகே சமத்துவபுரம் வீடுகள், பள்ளியில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் வீடுகளை சீரமைக்க பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த பணத்தை பெற்ற பயனாளிகள் முறையாக தங்களது வீடுகளை மறுசீரமைப்பு செய்துள்ளார்களா? என்பதை ஆய்வு செய்ய குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நித்திரவிளை பகுதியில் உள்ள சமத்துவபுரம் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், குடிநீர் உள்பட பல்வேறு அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து தரும்படி அனு அளித்தனர்.
பின்னர் அந்த பகுதியில் செயல்பட்டு வந்த அரசு ஆதி திராவிடர் நலப் பள்ளியில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்ட போது பள்ளி கட்டிடத்தில் சிமெண்டுகள் பெயர்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையை பார்த்தார்.
உடனே அங்குள்ள மாணவர்களை வேறு இடத்துக்கு மாற்றி வகுப்புகள் நடத்த தலைமை ஆசிரியருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதற்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க கொல்லங்கோடு நகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.