< Back
மாநில செய்திகள்
வேதாரண்யத்தில், இருப்பு வைக்கப்பட்ட உப்பு ஏற்றுமதி தீவிரம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

வேதாரண்யத்தில், இருப்பு வைக்கப்பட்ட உப்பு ஏற்றுமதி தீவிரம்

தினத்தந்தி
|
9 Dec 2022 12:15 AM IST

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக வேதாரண்யம் பகுதியில் இருப்பு வைக்கப்பட்ட உப்பை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக வேதாரண்யம் பகுதியில் இருப்பு வைக்கப்பட்ட உப்பை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உப்பு உற்பத்தி நிறுத்தம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவ மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் ெதாடர்ந்து மழை பெய்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உப்பளங்களில் உள்ள பாத்திகளில் மழை நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது. தற்போது மாண்டஸ் புயல் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி தீவிரம்

3 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு இதுவரை சேமித்து வைத்த உப்பை உற்பத்தியாளர்கள் தார்ப்பாய் மற்றும் பண ஓலையால் பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இருப்பு வைக்கப்பட்டுள்ள உப்பை ஏற்றுமதி செய்யும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வேலை வாய்ப்பு

நேற்று காலை வேதாரண்யம் பகுதியில் இருப்பில் இருந்த உப்பை பாக்கெட்டுகளில் அடைக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுப்பட்டு இருந்தனர். அதேபோல் உப்பை சாக்கு மூட்டைகளிலும் அடைத்து லாரிகளில் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

வேதாரண்யத்தில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு உப்பு ஏற்றுமதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உப்பை பாக்கெட் போடும் பெண் தொழிலாளர்கள் மற்றும் உப்பை லாரியில் ஏற்றிவிடும் ஆண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்