< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
விஷ பூச்சி கடித்து சலூன் கடைக்காரர் சாவு
|26 Jun 2023 1:26 AM IST
களக்காடு அருகே விஷ பூச்சி கடித்து சலூன் கடைக்காரர் இறந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள வடக்கு மீணவன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 68). இவர் அப்பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 24-ந் தேதி அவரை விஷ பூச்சி கடித்துள்ளது. உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இதுபற்றி அவரது மகன் சங்கிலி பூதத்தான் (20) களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.