< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
வாகனம் மோதி விற்பனையாளர் சாவு
|12 Oct 2023 2:47 AM IST
தஞ்சை அருகே வாகனம் மோதி விற்பனையாளர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர்;
தஞ்சையை அடுத்த திருவையாறில் உள்ள மருவூர் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன்(வயது 43). இவர் தஞ்சையில் உள்ள ஒரு மருந்தகத்தின் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மன்னார்குடியில் மருந்தை விற்பனை செய்துவிட்டு தஞ்சை நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாண்டையார்இருப்பு அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று முரளிதரன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலூகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முரளிதரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.