தமிழகத்தில் வாகனங்கள் விற்பனை பிப்ரவரியில் 22.4 சதவீதம் அதிகரிப்பு
|இந்திய அளவில் அனைத்து வகை வாகனங்கள் விற்பனை அளவு, பிப்ரவரியில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் அனைத்து வகை வாகனங்கள் விற்பனை அளவு பிப்ரவரியில் ஒரு லட்சத்து 84 ஆயிரமாக 22.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய அளவில் அனைத்து வகை வாகனங்கள் விற்பனை அளவு, பிப்ரவரியில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை, 2023 பிப்ரவரியில் ஒரு லட்சத்து 18 ஆயிரமாக இருந்து, 2024 பிப்ரவரியில் ஒரு லட்சத்து 43 ஆயிரமாக, 21.22 சதவீதம் அதிகரித்துள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, 2023 பிப்ரவரியில் 3 ஆயிரத்து 208 ஆக இருந்து, 2024 பிப்ரவரியில் 5 ஆயிரத்து 533 ஆக, 72.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சரக்கு வாகனங்கள் விற்பனை, 2023 பிப்ரவரியில் 6 ஆயிரத்து 765 ஆக இருந்து, 2024 பிப்ரவரியில் 7 ஆயிரத்து 80 ஆக, 4.66 சதவீதம் அதிகரித்துள்ளது. பயணிகள் வாகனங்கள் விற்பனை, 2023 பிப்ரவரியில் 19 ஆயிரத்து 229 ஆக இருந்து, 2024 பிப்ரவரியில் 24 ஆயிரத்து 987 ஆக, 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் டிராக்டர்கள் விற்பனை, 2023 பிப்ரவரியில் 3 ஆயிரத்து 215ஆக இருந்து, 2024 பிப்ரவரியில் 3 ஆயிரத்து 485 ஆக, 8.4 சதவீதம் அதிகரித்துள்ளது.