< Back
மாநில செய்திகள்
கரும்பு, வாழைக்கன்று விற்பனை மும்முரம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கரும்பு, வாழைக்கன்று விற்பனை மும்முரம்

தினத்தந்தி
|
23 Oct 2023 2:15 AM IST

பொள்ளாச்சி மார்க்கெட்டில் கரும்பு, வாழைக்கன்று விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

பொள்ளாச்சி மார்க்கெட்டில் கரும்பு, வாழைக்கன்று விற்பனை மும்முரமாக நடைபெற்றது.


ஆயுத பூஜை


நாடு முழுவதும் ஆயுத பூஜை இன்று(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி காய்கறி, பூ மார்க்கெட்டில் பொருட்கள் வரத்து அதிகரித்தது. இதை வாங்க சத்திரம் வீதி, கடை வீதி, காந்தி மார்க்கெட், திரு.வி.க. மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


இந்த நிலையில் நேற்று பூஜைக்கு தேவையான பூ, வாழைக்கன்று, கரும்பு, மாலை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.30-க்கும், கரும்பு ஒரு ஜோடி ரூ.100-க்கும் விற்பனை ஆனது.


பூ மாலைகள்


அதோடு பூக்கள் விலை உயர்ந்து இருந்தது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000 முதல் ரூ.1,200 வரையும், செவ்வந்தி ரூ.200 முதல் ரூ.300 வரையும், சம்பங்கி ரூ.250 முதல் ரூ.300 வரையும், முல்லை ரூ.600 முதல் ரூ.700 வரையும், கோழிக்கொண்டை ரூ.80 முதல் ரூ.100 வரையும், அரளி ரூ.400 முதல் ரூ.500 வரையும், பட்டுப்பூ ரூ.80 முதல் ரூ.100 வரையும், ஜாதிப்பூ ரூ.500 முதல் ரூ.600 வரையும், சில்லி ரோஸ் ஒரு கட்டு ரூ.320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்கள் விலை உயர்வால் பூ மாலைகளின் விலையும் உயர்ந்தது. கடந்த வாரம் ரூ.600-க்கு விற்ற 3 அடி உயர மாலை இந்த வாரம் ரூ.1,200-க்கும், கடந்த வாரம் ரூ.1200-க்கு விற்ற 6 அடி உயர மாலை இந்த வாரம் ரூ.2,500 வரை விற்கப்பட்டது.


காய்கறிகள்


இதேபோன்று காய்கறிகள் விலையும் அதிகமாக இருந்தது. குறிப்பாக கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.10 முதல் 20 வரை அதிகரித்து காணப்பட்டது. தக்காளி மட்டும் வரத்து அதிகரிப்பு காரணமாக 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.50 குறைந்து ரூ.150-க்கு விற்பனை ஆனது.


ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.40-க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், அரசாணிக்காய் ரூ.10-க்கும், கத்தரிக்காய் ரூ.40-க்கும், வெண்டைக்காய் ரூ.20-க்கும், பீர்க்கன்காய் ரூ.50-க்கும், கேரட் ரூ.60-க்கும், முட்டைகோஸ் ரூ.30-க்கும், முருங்கைகாய் ரூ.80-க்கும், காலிபிளவர் ரூ.40-க்கும், உருளைக்கிழங்கு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.


மேலும் செய்திகள்