< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை
|19 Jan 2024 12:34 PM IST
ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்று தனது உத்தரவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
தடையை நீக்க வேண்டும் என்றால் தனி மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக் கோரிய ஜெகநாதன் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து அவர் உத்தரவிட்டார். முன்னதாக வழக்கு விசாரணைக்கு அரசு தலைமை வக்கீல் ஆஜராகி வாதிட இருப்பதாக கூறி வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.