< Back
மாநில செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்
மாநில செய்திகள்

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
9 Feb 2024 10:54 AM IST

பதிவாளர் தங்கவேல் பிப்ரவரி 29ஆம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம்,

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவாளர் தங்கவேல் மீது பல்கலைக்கழகத்துக்கு கணிப்பொறி, இணைய உபகரணங்கள் வாங்குவது, ஆதி திராவிட இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து புகார்கள் எழுந்தன.

இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை தமிழக உயர்கல்வித்துறை அமைத்தது. அந்த குழு வெளியிட்ட அறிக்கையின்படி தங்கவேல் மீதான புகாரில் 8 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 2 குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. பதிவாளர் தங்கவேல் பிப்ரவரி 29ஆம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்