< Back
மாநில செய்திகள்
சேலம் மத்திய சிறையில்டி.ஜி.பி. அம்ரேஸ் பூஜாரி ஆய்வு
சேலம்
மாநில செய்திகள்

சேலம் மத்திய சிறையில்டி.ஜி.பி. அம்ரேஸ் பூஜாரி ஆய்வு

தினத்தந்தி
|
5 Dec 2022 1:43 AM IST

சேலம் மத்திய சிறையில் டி.ஜி.பி. அம்ரேஸ் பூஜாரி ஆய்வு செய்தார்.

சேலம் மத்திய சிறையில் டி.ஜி.பி. அம்ரேஸ் பூஜாரி ஆய்வு செய்தார்.

டி.ஜி.பி. ஆய்வு

தமிழக சிறைத்துறை புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட அம்ரேஸ் பூஜாரி, ஒவ்வொரு மத்திய சிறைக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் வேலூர் சிறையில் அவர் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அவர் நேற்று காலை சேலம் வந்தார். பின்னர் அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறையில் டி.ஜி.பி. அம்ரேஸ் பூஜாரி ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு சிறைக்காவலர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

பின்னர் அவர் சிறைக்குள் புதிதாக வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இடையேயான இன்டர்காம் வசதியை பார்வையிட்டார். தொடர்ந்து சிறையில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார். அப்போது, மத்திய சிறைக்கு வேறு என்ன அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

குறைகளை கேட்டார்

மேலும், சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்காவலர்களிடம் டி.ஜி.பி. அம்ரேஸ் பூஜாரி குறைகளை கேட்டறிந்தார். இதுதவிர, சிறை கைதிகளிடமும் அவர் குறைகளை கேட்டார்.

இந்த ஆய்வின்போது, கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்