< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சேலம்: பள்ளிக்கு செல்ல பயந்து 8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
|19 Sept 2022 6:37 PM IST
பள்ளிக்கு செல்ல பயந்து 8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டம், ஜான்சன்பேட்டை பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுரு. இவரது மகன் அரசகுரு. இவர் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அரசகுரு பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல், வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், மாணவன் அரசகுரு இன்று பள்ளிக்கு செல்ல இருந்துள்ளார். திடீரென பள்ளிக்கு செல்ல பயந்து வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்த பெற்றோர் மாணவனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.