< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரம்ஜான் பண்டிகையையொட்டி களைகட்டிய ஆடுகள் விற்பனை..!
|21 April 2023 7:26 AM IST
ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.
சென்னை,
ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் இதுவரை சுமார் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது.
புதுக்கோட்டை சந்தைப்பேட்டை வாரச்சந்தையிலும் சுமார் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூரில் 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் சுமார் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது.