< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இயல்புநிலை திரும்பும் வரை குறைந்த விலையில் காய்கறி விற்பனை - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
|8 Dec 2023 5:05 PM IST
மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
சென்னை,
சென்னை மாநகராட்சியில் இயல்புநிலை திரும்பும் வரை குறைந்த விலையில் காய்கறி விற்பனை செய்யப்படும் என, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தோட்டக்கலை மூலம் குறைந்த விலையில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை தொடங்கி வைத்த அவர், சென்னை மாநகராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 100 வாகனங்கள் மூலம் குறைந்த விலையில் காய்கறி விற்பனை செய்யப்படும் என்றார். மேலும், மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.