< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடையில் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் விற்பனை
அரியலூர்
மாநில செய்திகள்

ரேஷன் கடையில் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் விற்பனை

தினத்தந்தி
|
24 Jun 2023 11:45 PM IST

ரேஷன் கடையில் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள ரேஷன் கடையில் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் விற்பனையை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் முழு நேர மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் என மொத்தம் 465 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நகர்ப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் சிறுதானிய உணவு பொருட்கள் விற்பனையில் பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து மாவட்டத்தின் கிராமப்புறங்கள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள ரேஷன் கடைகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது உடல்நலத்திற்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் சிறுதானிய உணவு பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்று பயன்பெற வேண்டும் என்றார். இதில் கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் தீபாசங்கரி, துணை பதிவாளர் அறப்பளி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தாசில்தார் துரை மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்