< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் 5 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை
|2 Aug 2023 12:15 AM IST
தென்காசி மாவட்டத்தில் 5 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் 5 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.
தென்காசி ஒப்பனை பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள கடையில் 14 கிலோவும், படிக்கட்டு பள்ளிவாசல் தெரு கடையில் 14 கிலோவும், சுரண்டை கடையில் 25 கிலோவும், சங்கரன்கோவிலில் ராஜபாளையம் மெயின் ரோட்டில் உள்ள கடையில் 13 கிலோவும், சங்கரன்கோவில் கோமதியாபுரம் 2-ம் தெரு கடையில் 12 கிலோவும் என மொத்தம் 78 கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இந்த கடைகளில் தொடர்ந்து தக்காளி விற்பனை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.