< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்பனை: பெட்டிக்கடைக்கு சீல்
|16 Aug 2022 10:10 PM IST
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர வடிவேல், ஏட்டுகள் செல்வகுமார், ரகுபாஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் பனையபுரம் கடைவீதியில் அமுதா (வயது 46 ) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அமுதாவை போலீசார் கைது செய்தனர்.
தகவல் அறிந்த தாசில்தார் இளவரசன் உத்தரவின் பேரில் பனையபுரம் கிராம நிர்வாக அலுவலர் கவுசல்யா போலீசார் பாதுகாப்புடன் பெட்டிக்கடையை பூட்டி சீல் வைத்தார்.