< Back
மாநில செய்திகள்
முத்தியால்பேட்டை ஊராட்சியில் மது விற்பதை தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

முத்தியால்பேட்டை ஊராட்சியில் மது விற்பதை தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
4 Oct 2022 2:39 PM IST

முத்தியால்பேட்டை ஊராட்சியில் மது விற்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சியில் முத்தியால்பேட்டை, வள்ளுவப்பாக்கம், ஏரிவாய், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கியுள்ளது. அங்கு ஒருவர் டாஸ்மாக் கடைகளிலிருந்து மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வந்து கலப்படம் செய்து விற்று வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து மது விற்பதை தடுக்க வேண்டும் என்று காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகனுடன் வந்து மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்