< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
குட்கா விற்ற கடைக்கு சீல்
|9 Oct 2022 12:15 AM IST
குட்கா விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு, பனையபுரத்தில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரிவிநாயகம், கிராம நிர்வாக அலுவலர்கள் சண்முக வேலன், கவுசல்யா அங்குசென்று குணசேகர் என்பரவது கடையில் சோதனையிட்டனர். அப்போது, அங்கு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வருவாய் துறையினர் மூலம் கடைக்கு சீல் வைத்தனர். இதுதொடர்பாக உரிமையாளர் குணசேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.