< Back
மாநில செய்திகள்
உளுந்தூர்பேட்டை வார சந்தையில்    ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

உளுந்தூர்பேட்டை வார சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தினத்தந்தி
|
20 Oct 2022 12:15 AM IST

உளுந்தூர்பேட்டை வார சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.


உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆடு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆடு சந்தையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை வருவதால், ஆடுகள் வாங்குவதற்காக நேற்று வழக்கத்தை விட அதிகமான வியாபாரிகள் ஆட்டுச்சந்தைக்கு வருகை தந்திருந்தனர்.

4 மணி நேரத்தில் நிறைவுபெற்றது

அதேபோல் ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு இருந்தன. இதனால் வழக்கத்தை விட ஆடுகள் சந்தை நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.

வியாபாரிகள் அனைவரும் ஆடுகளை போட்டிபோட்டு வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. ஒரு ஆட்டின் விலை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரைக்கும் விற்பனையானது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சந்தை 4 மணி நேரத்தில் நிறைவு பெற்றது. இதில் ரூ. 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்