< Back
மாநில செய்திகள்
போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

தினத்தந்தி
|
31 July 2022 10:58 PM IST

கிருஷ்ணகிரியில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

மத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கூடும் சந்தை தமிழகத்திலேயே பெரிய சந்தையாகும். ஆடிப்பெருக்கு விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு நேற்று போச்சம்பள்ளி சந்தைக்கு ஏராளமான ஆடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆடுகள், கோழிகளை வாங்குவதற்காக திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து இருந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு விலை கேட்டதால் சந்தையில் ஆடுகள், கோழிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதில் 10 கிலோ எடையுள்ள ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்