< Back
மாநில செய்திகள்
ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி
மாநில செய்திகள்

ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

தினத்தந்தி
|
7 July 2022 9:29 PM IST

பொம்மிடி வாரச்சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனது.

பாப்பிரெட்டிப்பட்டி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடி வட சந்தையூரில் வாரச்சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தைக்கு மேச்சேரி, கம்பைநல்லூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடு, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதை வாங்க சேலம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். நேற்று அதிகாலை முதலே விவசாயிகள் வாகனங்களில் ஆடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். நாட்டுக்கோழி உயிருடன் கிலோ ரூ.450-க்கும், ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கினர். வாரச்சந்தையில், ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்