< Back
மாநில செய்திகள்
போலீசார் அதிரடி சோதனை:  கஞ்சா, குட்கா விற்பனை செய்த 36 பேர் கைது  9 கிலோ பறிமுதல்
கடலூர்
மாநில செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை: கஞ்சா, குட்கா விற்பனை செய்த 36 பேர் கைது 9 கிலோ பறிமுதல்

தினத்தந்தி
|
4 Aug 2022 10:13 PM IST

கடலூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, குட்கா விற்பனை செய்த 36 பேரை போலீசார் கைது செய்து , அவர்ளிடம் இருந்து 9 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனை செய்பவர்களை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி கஞ்சா விற்பனை செய்த திட்டக்குடி கீழ்செருவாய் சீனிவாஸ் (வயது 22), திருமாணிக்குழி பாலகிருஷ்ணன் (35), பாதிரிக்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், சிதம்பரம் சிவா (24), விமல் என்கிற விமல்ராஜ் (23), ஆலப்பாக்கம் பிரகாஷ் (28), கிஷோர் (20), புதுப்பேட்டை ரகுபதி (22), திட்டக்குடி கோழியூர் ஆனந்தராஜ் (20), செந்துறை பிரவின் (19) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா பறிமுதல்

இதேபோல் குட்கா விற்பனை செய்த கடலூர் முதுநகர் பனங்காட்டு காலனி தர்மலிங்கம் (60), சிதம்பரம் சாலைக் கரை சூர்யா (21), சிலுவைபுரம் பவுல்ராஜ் (55), சி.புதுப்பேட்டை பாக்கியவதி (55), அம்மாபேட்டை ராஜா (35), புவனகிரி ராமச்சந்திரன் (51), குமாரமங்கலம் தங்கதுரை (50), சி.சாத்தமங்கலம் மாரியப்பன் (49), சேத்தியாத்தோப்பு ராமச்சந்திரன் (61), குமராட்சி பாலு (61), திட்டக்குடி விஸ்வநாதன் (60), வசிஷ்டபுரம் தனலட்சுமி (49) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் திட்டக்குடி செல்வம் (46), குணசேகரன் (58), ராஜேந்திரன் (54), ராமநத்தம் குகன் (32), கஜா (41), கீரனூர் மணிவேல் (39), வேப்பூர் கோசல்ராம் (48), பக்ருதீன் (46), ஆவினங்குடி பிரபு (40), திட்டக்குடி கொளஞ்சி (62), அகிலாண்ட கங்காபுரம் சீனிவாசன், அனுவம்பட்டு வேல்முருகன் (40), ஸ்ரீமுஷ்ணம் கவிதா (35), பால்வாத்துண்னான் சின்னையன் (40) என குட்கா விற்பனை செய்த மொத்தம் 26 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ 610 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்