< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில் விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கியது
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கியது

தினத்தந்தி
|
29 Aug 2022 12:45 AM IST

நாமக்கல்லில் விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கியது.

நாமக்கல்லில் விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கியது.

விநாயகர் சிலைகள்

நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகள் மற்றும் தெருக்களில் சிலைகளை வைத்து வழிபடும் பொதுமக்கள் பின்னர் அவற்றை நீர்நிலைகளில் கரைத்து விடுவார்கள்.

இதனால் நாமக்கல்லில் நேற்று முதலே விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கியது. பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ள சிலைகளை பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது. இந்த சிலைகள் அவற்றின் தரத்தை பொறுத்து ரூ.100 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

கூடுதல் கட்டுப்பாடுகள்

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது சிலை விற்பனை மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதற்கு சிலை வைப்போருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதே காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு போலீசாரிடம் உரிய அனுமதி பெற்று 650 இடங்களில் சிலை வைத்து பூஜைகள் நடைபெற்றதாகவும், இந்த ஆண்டு இதுவரை சுமார் 200 இடங்களில் மட்டுமே சிலை வைக்க அனுமதி கேட்டு மனுக்கள் வரப்பெற்று இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்