< Back
மாநில செய்திகள்
அமுதம் பல்பொருள் அங்காடிகளில் நாளை முதல் கொள்முதல் விலையில் பருப்பு, தக்காளி விற்பனை
மாநில செய்திகள்

அமுதம் பல்பொருள் அங்காடிகளில் நாளை முதல் கொள்முதல் விலையில் பருப்பு, தக்காளி விற்பனை

தினத்தந்தி
|
13 July 2023 7:07 PM IST

சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகளில் நாளை முதல் கொள்முதல் விலையில் பருப்பு, தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.

சென்னை,

சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில், நாளை முதல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி கொள்முதல் விலைக்கு விற்பனை செய்ய உணவுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதில் தக்காளி 1கிலோ ரூ.60க்கும், துவரம் பருப்பு 500 கிராம் ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் ரூ.60க்கும் விற்பனை செய்ய உணவுத்துறை திட்டமிட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதி உணவுத்துறை சார்பில் கொள்முதல் விலைக்கு நாளை முதல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்