< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.17½ லட்சத்திற்கு பருத்தி விற்பனை
|24 Jun 2023 1:31 AM IST
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.17½ லட்சத்திற்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது
எடப்பாடி:-
எடப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முதன்முறையாக பருத்திக்கான பொது ஏலம் தொடங்கியது. இதில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த 703 பருத்தி மூட்டைகள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. பொது ஏலத்தில் பருத்தி கிலோ ஒன்று ரூ.43.60 முதல் அதிகபட்சமாக ரூ.70.19 வரை விற்பனையானது. நாள் முழுதும் நடைபெற்ற பொதுஏலத்தில் 17 லட்சத்து 61 ஆயிரத்து 215 ரூபாய் மதிப்பிலான பருத்தி விற்பனையானதாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.