< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் ரூ.30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் ரூ.30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

தினத்தந்தி
|
18 May 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சியில் ரூ.30 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி சந்தை நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நயினார்பாளையம், சங்கராபுரம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 185 விவசாயிகள் 1,230 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த பருத்தி மூட்டைகளை அன்னூர், புஞ்சைபுளியம்பட்டி, திருப்பூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச்சென்றனர். இதில் எல்.ஆர்.ஏ.ரகம் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 469-க்கும், குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரத்து 899-க்கும், கொட்டுரகம் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 899-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 109-க்கும் விற்பனையானது. நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.30 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானதாக வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்