< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
மறைமுக ஏலத்தில் ரூ.60 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
|24 July 2022 1:20 AM IST
மறைமுக ஏலத்தில் ரூ.60 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
ஜெயங்கொண்டம்:
பெரம்பலூர் விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனைக்கூடத்தில் பருத்தி கொள்முதலுக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டு விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் நன்கு உலர வைத்து கொண்டு வந்திருந்த பருத்தியை நல்ல விலை கோரி கொள்முதல் செய்தனர். இதில் அதிபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 539-க்கு விலை போனது. குறைந்தபட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 409-க்கும், சராசரி விலையாக பருத்தி குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 489-க்கும் விலைபோனது. மறைமுக ஏலத்தில் மொத்தம் 653.69 குவிண்டால் பருத்தி 349 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. மறைமுக ஏலம் மூலம் ரூ.60 லட்சத்து 17 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது.