< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மலை கிராமத்தில் சர்வ சாதாரணமாக கள்ளச் சாராயம் விற்பனை - பெண்கள் அதிர்ச்சி
|16 Nov 2022 3:21 PM IST
ஜவ்வாது மலைப் பகுதியில் சர்வ சாதாரணமாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதால், மலைவாழ் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த ஜவ்வாது மலைப் பகுதியில் சர்வ சாதாரணமாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதால், மலைவாழ் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொல்லைமேடு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், ஒரு பாக்கெட் 50 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 500-க்கும் மேற்பட்டோர் தினசரி வாடிக்கையாளராக சாராயம் வாங்கிச் செல்வதாக அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவிக்கி தெரிவிக்கின்றனர்.
இதுபோன்று மலைப்பகுதியில் ஆங்காங்கே கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.