தொண்டி அருகே பாய்மர படகு போட்டி - 34 பாய்மர படகுகள் பங்கேற்பு
|தொண்டி அருகே சிங்காரவேலர் நகரில் நடைபெற்ற பாய்மர படகு போட்டியில் 34 பாய்மர படகுகள் பங்கேற்றனர்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள சிங்காரவேலர் நகர் லாஞ்சியடியில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 34 பாய்மர படகுகள் கலந்து கொண்டன.
ஒரு படகுக்கு ஆறு பேர் வீதம் 12 கிலோமீட்டர் தூரம் சென்று வந்தன. இப்போட்டியில் கலந்து கொண்ட மீனவர்கள் காற்றின் வேகத்திற்கு தகுந்தார் போல் காற்றை எதிர்கொண்டு படகுகளை இயக்கினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கடலோர காவல் படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கனகராஜ், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், மறைன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், தனிப்பிரிவு தலைமை காவலர் இளையராஜா உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இப்போட்டிகளை சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.