< Back
மாநில செய்திகள்
பாய்மர படகு போட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பாய்மர படகு போட்டி

தினத்தந்தி
|
25 Jun 2022 6:32 PM GMT

பாய்மர படகு போட்டி நடந்தது.

ஆர்.எஸ்.மங்கலம்

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கடலூர் ஊராட்சி மோர்ப்பண்ணை மீனவர் கிராமத்தில் ஸ்ரீராண பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி விசால திருவிழாவை முன்னிட்டு நேற்று பாய்மர படகு போட்டி நடந்தது. கடலுக்குள் 6 மைல் தூரம் எல்லையாக வரையறுக்கப்பட்டு படகுக்கு 6 பேர் வீதம் அனுமதிக்கபட்டு போட்டி நடந்தது. மொத்தம் 12 படகுகள் போட்டியில் கலந்து கொண்டன. போட்டியை கிராமத் தலைவர் மாடம்பூரான், செயலாளர் மலைக்கண்ணன் மற்றும் கிராம நிர்வாகிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டியில் இலக்கை அடைந்து முதல் பரிசாக ரூ.30,001-ஐ ஈஸ்வரன் படகும், இரண்டாம் பரிசாக ரூ. 25,001-ஐ பாலமுருகன் படகும், 3-ம் பரிசாக ரூ.20,001-ஐ பாலாஜி படகும், 4-ம் பரிசாக ரூ.15,001-ஐ காளீஸ்வரன் படகும் பெற்றன.

Related Tags :
மேலும் செய்திகள்